“பாரதியார் சொன்னது தவறு”- திருத்திய இளையராஜா

ilaiyaraaja speech at iit function

சென்னை ஐஐடி வளாகத்தில் 9ஆவது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நேற்று பிரம்மாண்டமானநிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த மாநாடு 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தானது. மேலும் அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “எனக்கு மியூசிக் தெரியாது. கத்துக்கிறதுக்காக கிராமத்திலிருந்து சென்னை வந்தேன். இது நாள் வரைக்கும் கத்துருக்கேனா எனக் கேட்டால், இல்லை. நிஜமா கத்துக்கவில்லை. கத்துக்கிறதுக்காக வந்த நான், இப்போ கத்துக்கொடுக்கனும்னு இந்த செண்டர் ஆரம்பிச்சிருக்காங்க. நான் பிறந்த ஊருல கத்துக்கனும்னு நினைச்சா கத்துக் கொடுக்க ஆள் இல்லை.

ஒருத்தனுக்கு தண்ணி கொடுக்காத, தாகத்தை உண்டு பண்ணு, அவன் கண்டிப்பா தண்ணீரை கண்டுபிடிச்சிடுவான். எந்த வேலையாக இருந்தாலும் சரி, அதில் ஒரு தாகம் ஏற்பட்டு நெருப்பு மாதிரிமுயற்சி செய்தால், எந்த இடத்தையும் அடையளாம். அப்படி அடைந்தாலும் அந்த இடம் ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது. எல்லாரும் சொல்றாங்க நான் சாதிச்சிட்டேன்னுஎனக்கு அப்படி ஒன்னும் தெரியல. கிராமத்திலிருந்து எப்படி வந்தேனோ அதேப் போலத்தான் இப்பவும் உணருகிறேன். இந்த நிர்வாகத்தில் 200 இளையராஜா வரனும். எனக்கு இசையே என் மூச்சாக மாறிவிட்டது. மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்குறதோ இசை எனக்கு இயற்கையாக வருகிறது. பாரதியார் சொன்னார், 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்', அது தவறு. 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலை செல்வங்களை அங்கு கொண்டு சேர்ப்பீர். அந்த மாதிரி இந்த நிறுவனம் வரவேண்டும்” என்றார்.

bharathiyar CHENNAI IIT Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Subscribe