ilaiyaraaja sivakumar event

பொன்னியன் செல்வன் நாவலில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தனது ஓவியம் மூலம் உருவம் கொடுத்து பிரபலமானவர் மறைந்த ஓவியர் மணியம். இவரது நூற்றாண்டு விழா, இந்தாண்டு கொண்டாடபட்டு வரும் நிலையில், அதையொட்டி அவரது ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி சென்னையில் தொடங்கபட்டது. அதன் தொடக்க விழாவில் இளையராஜா, சிவகுமார் மணியமின் மகன், மணியம் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, மணியமின் ஓவியம் குறித்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “அன்னக்கிளியில் இருந்து இப்போது வரை, 46 வருஷம் நான் எழுதிய நோட்ஸ் எல்லாம் சேகரிப்பதற்காக தேடினேன். பல படங்களின் நோட்ஸ் காணவில்லை. எங்க போனுச்சுனு தெரியவில்லை. திருடிட்டு போனாங்களா, காப்பி அடிக்க எடுத்துட்டு போனாங்களா... ஒன்னும் தெரியவில்லை.

Advertisment

ஓவியர் மாதிரி தான் நானும் கோடு போடுறேன். அது எப்படி உங்க மனச தொடும். இது என்ன மாயம். அது இன்னும் அப்படியே நடந்துகிட்டு வருது. எனக்கும் தெரியாது. அந்த தருணத்தில் பேனாவை எடுத்து எழுத தொடங்கும் போது, தானாக வருது. சரியாக நான் எழுதி முடிக்கும் போது, ரீலில் அந்த காட்சிகள் முடிஞ்சிருக்கும்.

நான் வேலைசெஞ்ச ஹீரோக்களிலே அதிகமா மியூசிக் செஞ்சது உங்களுக்கு தான்” என சிவகுமாரை பார்த்துச் சொன்னார். உடனே சிவக்குமார் அப்படியா... என நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அதிர்ச்சி ரியாக்‌ஷன் கொடுத்தார்.

Advertisment