/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1013_0.jpg)
இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாதுஉலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். சமீபத்தில் இவர்தனது80வதுபிறந்தநாளைக்கொண்டாடினர். இதனைமுன்னிட்டு சென்னை மற்றும் கோவையில் இளையராஜா தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும்வரவேற்பைப்பெற்றதைத்தொடர்ந்து அடுத்ததாகமதுரையில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில்ட்விட்டரில்இளையராஜாரசிகர்களின்பலகேள்விகளுக்குப்பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், "கொஞ்சம் மழை வந்தால் போதும், மெட்ராஸ் மக்களுக்கு உடனே வெங்காய பஜ்ஜி, டீ மற்றும் ராஜா பாடல் என்று பதிவு செய்திருந்தார்.இதற்குப்பதிலளித்த இளையராஜா, "எதாவதுஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்றால் என்னுடைய பாட்டு உங்களுக்கு ஞாபகம் வரும். அல்லது ஏதாவது ஒரு பாட்டு ஞாபகம் வந்தது என்றால் உங்களுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது சம்பவம்அதோடு தொடர்புடையதாக இருக்கும். உலக ரசிகர்களுக்கு இதைவிட்டாவேறவழியும் இல்லை" எனப் பதிலளித்தார்.
Loved reading your #FanTweets ? pic.twitter.com/iLVdKpnvg2
Follow Us