Advertisment

ஜி.வி. பிரகாஷுக்கு பதில் இளையராஜா - பாரதிராஜா படத்தில் திடீர் மாற்றம்

ilaiyaraaja joins the bharathiraja movie

Advertisment

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாகவும், முக்கியக் கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்க, பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="eed830bb-75c2-4a3e-a509-110e57b0dfba" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-DD-Website_1.jpg" />

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பழனி அருகே கணக்கப்பட்டி பகுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. படப்பிடிப்புத்தளத்தில் மழையினால்இடி விழுந்துஏற்பட்ட விபத்தில் நல்வாய்ப்பாக 5 லைட் மேன்கள் உயிர் தப்பியதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருந்தார்.

Advertisment

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பார் என்று படக்குழு குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது இளையராஜா இசையமைக்கவுள்ளதாக பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் என் உயிர்த்தோழன் இளையராஜாவுடன் இணைவது பெருமை எனக் குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி இளையராஜாவை நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய பெரும்பாலான தமிழ்ப் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருக்கிறார். ஆனால் இப்படத்தின் மூலம் முதல் முறையாக பாரதிராஜா நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார்.

director suseenthiran Bharathi Raja Ilaiyaraaja GV prakash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe