Advertisment

இளையராஜா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

ilaiyaraaja concert in coimbatore gets new date

இளையராஜா தனது இசையின் மூலம் எண்ணற்ற மனங்களை வென்ற நிலையில் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டே இன்றளவும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக கரூரில் நடத்தினார். அப்போது சில ரசிகர்களுக்கு டிக்கெட் வாங்கியும் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஒரு ரசிகர் விரக்தியில் டிக்கெட்டை கிழித்து போட்டு பாதியிலேயே வெளியேறிய சம்பவம் அரங்கேறியது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான முறையில் வசதிகள் செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி கோயம்புத்தூரில் இளையராஜா கச்சேரி நடக்கவிருந்தது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்ற சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சிக்கான புது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற 31ஆம் தேதி(31.05.2025) கோவையில் செவென் ஹில்ல்ஸ் சிட்டி கிரௌண்ட்ஸ், ஜி ஸ்கொயரில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே 17ஆம் தேதிக்கு டிக்கெட் பெற்ற அனைவரும் இதில் பங்கேற்கலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி தள்ளி போனபோது ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இப்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

Coimbatore Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe