லண்டனில் வெற்றிகரமாக சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தி முடித்த இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அவரது 50 ஆண்டு திரைப்பயண நிறைவை முன்னிட்டும் விழா நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விழா அவர் கொண்டாடி வரும் பிறந்தநாள் தினமான ஜூன் 2ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. 

Advertisment

ஆனால் பின்பு சில காரணங்களால் அது தள்ளிப் போகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் திரை உச்ச நட்சத்திரங்களான மற்றும் இளையராஜாவின் நண்பர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.