ilaiayraaja speech at viduthalai 2 audio launch

‘விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

இந்த விழாவில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது இளையராஜா பேசுகையில், “எல்லாப் படத்தின் இசை வெளியீட்டு விழா போல இது நடக்கவில்லை. 'விடுதலை' படத்திற்காக வெற்றிமாறன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். 'தெனந் தெனமும்' பாடலை முதலில் சஞ்சய் சுப்ரமணியம் குரலில் பதிவு செய்துவிட்டேன். கர்நாடக இசையில் அவர் ஒரு வித்துவான். அவரை அழைத்து வந்து சினிமாவில் பாட வைத்ததேன். அதன் பிறகு வெற்றிமாறன், என்னுடைய குரலில் வேண்டும் என கேட்டார். அதன் பிறகு சஞ்சயை 'மனசுல' பாடலை பாடவைத்தேன்.

Advertisment

இந்தப் படத்தை உங்களை மாதிரியே நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல் பாகத்தை வைத்து இரண்டாம் பாகம் இப்படித்தான் இருக்கும் என எதிர்பாக்காதீங்க. வெற்றிமாறன் வேற ரூட்டில் ட்ராவல் பண்றார். நிச்சயம் இந்தப் படத்தை வெற்றி படமாக ஆக்குவார். ஏனென்றால் அவ்வளவு பெரிய உழைப்பு இருக்கிறது. ராஜீவ் மேனனை பார்த்ததும் நான் யார் எனக் கேட்டேன். எனக்கு அவரை தெரியாது. பிறகு அவர் ஒளிப்பதிவாளர் என்பதை தெரிந்து கொண்டேன். சிறப்பாக நடித்திருக்கிறார்.

சேத்தன் நடித்ததைப் பார்த்து நான் பாராட்டினேன். ஆனால் நான் பாராட்டிய சீன்களை வெற்றிமாறன் கட் பண்ணிவிட்டார். அவர்தான் டைரக்டர். அவர் முடிவு செய்ததை தான் நாம் படமாக பார்க்கிறோம். படத்தை உருவாக்குவது ரொம்ப கஷ்டம். அதே போலத் தான் இசையும். இந்தப் படத்திற்கு இசை அமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது மாதிரி. வெற்றி மாறன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அப்படியே இசையாக மாற்றினேன். நான் இசையமைக்கும்போது வெற்றி மாறன் எப்போதும் ரெக்கார்டு செய்து கொண்டே இருப்பார். அந்த வீடியோக்களை என்னிடம் அவர் கொடுக்க வேண்டும். வெளியில் அதை கொடுத்தால் நல்ல பணம் கிடைக்கும்” என சிரித்தப்படி கலகலப்பாக பேசினார்.

Advertisment

பின்பு தொடர்ந்து பேசிய அவர், “இவ்வளவு நேரம் நான் ஒரு இசை வெளியீட்டு விழாவில் இருந்தது இல்லை. நிகழ்வுக்கு போவதும் இல்லை. இந்த நிகழ்வில் முன்பே பேசிவிட சொன்னார்கள். நான் இருக்கேனு சொன்னேன். எல்லோர் பேசுவதையும் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்றார்.