தங்க மயில் விருது போட்டியில் 3 இந்தியப் படங்கள்

iffi goa 2024 3 indian movies for thanga mayil award

கோவாவில் ஆண்டு தோறும் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தாண்டும் வருகிற 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. அதே வேளையில் இந்தியத் திரைப்பட ஆளுமை, தங்கமயில், வெள்ளிமயில், சிறந்த இயக்குநர், நடிகர், நடிகை எனப் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது.

iffi goa 2024 3 indian movies for thanga mayil award

இதில் முக்கியத்துவம் வாய்ந்த விருதாக பார்க்கபடும் தங்க மயில் விருதுக்கு மொத்தம் 15 படங்கள் போட்டியிடுகின்றன. இதில் மலையாளத்தில் இருந்து பிரித்விராஜ் நடிப்பில் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரபல நாவலான ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலை மையப்படுத்தி அதே தலைப்பில் எடுக்கப்பட்ட ஆடுஜீவிதம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் ஆர்டிக்கல் 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பாலிவுட்டில் எடுக்கப்பட்ட ‘ஆர்டிகள் 370’ மற்றும் மற்றொரு இந்திப் படமான ராவ்சாஹேப் ஆகிய 3 இந்திய படங்களும் போட்டியிடுகின்றன.

Goa International Film Festival
இதையும் படியுங்கள்
Subscribe