Skip to main content

“முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்றால்...”- நடிகர் சூரி வேதனை

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

"If you go out of the house earlier...."- Actor soori pressmeet

 

திரைப்பட காமெடி நடிகரான சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி.-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

 

மேலும், தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன் ஆறு மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது. 

 

இதையடுத்து, இந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே மூன்று முறை நடிகர் சூரி விசாரணைக்கு ஆஜரான நிலையில், நேற்று (24/11/2022) நான்காவது முறையாக மீண்டும் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் சூரி பதிலளித்தார். 

 

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் சூரி, "முதல்முறை வந்தேன், விசாரணை நடந்தது. மறுமுறை வந்தேன், விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன், விசாரணை நடந்தது. இன்றும் வந்தேன், விசாரணை நடந்தது. முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்றால், குழந்தைகள் எங்கே ஷூட்டிங்? ஷூட்டிங் போறீங்களா? என்று கேட்பார்கள். இப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலே, குழந்தைகள் அப்பா எங்கே போறீங்க? போலீஸ் ஸ்டேஷனா? என்று கேட்கிறார்கள். வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் கனவில் கூட வருகிறது. 

 

நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். நியாயத்தை நம்பியிருக்கிறேன்; காவல்துறையை நம்பியிருக்கிறேன்; கோர்ட்டை நம்பியிருக்கிறேன்; கடவுளை நம்பியிருக்கிறேன். விசாரணை திருப்தியாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். விசாரணை காலதாமதத்திற்கு நாம் ஒன்றும் பதில் சொல்ல முடியாது. நாம் மட்டுமே கிடையாது. எத்தனையோ வழக்குகள் உள்ளது. எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தினார்களா? என்பது எனக்கு தெரியவில்லை" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

‘மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும்...’ - காதலில் கருடன் சூரி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
garudan movie soori Panjavarna Kiliye video song released

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.  

இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ‘பஞ்சவர்ண கிளியே...’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் கதாநாயகி ரேவதி ஷர்மா கதாபாத்திரத்திற்கும் சூரி கதாபாத்திரத்திற்குமான காதலை விவரிக்கும் வகையில் உள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக, ‘யாரோட யாரோட என் காதல் கதை பேச. உன் கூட உன் கூட எத வச்சு நான் பேச. மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும். உன்னை பார்த்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.