Advertisment

"சமரசம் செய்தால் தான் படம் கிடைக்கும்... இல்லையென்றால் நீக்கிவிடுவார்கள்" - கமல் பட நடிகை பளிச்

publive-image

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் மல்லிகா ஷெராவத் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வகையில் தமிழில் கமலின் 'தசாவதாரம்' படத்தில் நடித்துள்ளார். சிம்புவின் 'ஒஸ்தி' படத்தின் 'கலாசல கலசலா' பாடலுக்கு நடனமாடியுள்ளார். சமீபத்தில் மல்லிகா ஷெராவத் நடிப்பில் வெளியான ''ஆர்கே/ஆர்கே' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b8053478-888d-4d3d-93b7-68ad1dcff875" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_33.jpg" />

Advertisment

இந்நிலையில் மல்லிகா ஷெராவத் "இந்தி திரையுலகில் முன்னணி ஹீரோக்கள் என்னுடன் நடிக்க மறுத்துவிட்டனர், ஏனென்றால் நான் அவர்களிடம் சமரசம் செய்துகொள்ள வில்லை" என்று பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் மல்லிகா ஷெராவத் கூறியிருப்பதாவது, "பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் தங்கள் கட்டுப்பாட்டில், தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு ஒத்துழைக்கும் நடிகைகளைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை.

ஹீரோக்கள் உட்காரு, எழு என்று என்ன சொன்னாலும் அதைச் செய்ய வேண்டும். காலை 3 மணிக்கு ஹீரோ போன் செய்து என் வீட்டிற்கு வா என்றால் உடனே செல்ல வேண்டும். அதைச் செய்தால் தான் படம் கிடைக்கும். இல்லையென்றால் படத்திலிருந்து நீக்கிவிடுவார்கள். நான் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய முயற்சி செய்தேன். அனைவரையும் போன்று நானும் சில தவறுகள் செய்தேன். சில கதாபாத்திரங்கள் நல்லதாக இருந்தன, சில இல்லை. ஆனால் என் திரைப்பயணம் சிறப்பானது" எனக் கூறியுள்ளார்.

Bollywood Mallika Sherawat
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe