if you ask a  question you cannot wear police uniform ... 'Tanakkaran' warns.

நடிகர் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாணாக்காரன்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம்'அசுரன்' படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'டாணாக்காரன்' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனோடு படத்துடைய ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறார்கள். இரண்டு நிமிடம் ஓடக்கூடிய இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 'ஏப்ரல் 8-ஆம்' தேதி 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Advertisment