Advertisment

“சூர்யா மன்னிப்பு கேட்டால் மக்கள் கதறி துடித்துவிடுவார்கள்..” - போஸ் வெங்கட் 

publive-image

நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், அதில் வன்னிய இன மக்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டி வருகிறார். அதேபோல், வன்னியர் சங்கமும் படத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட்டிடம் நக்கீரன் யூடியூப் மூலம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்களில் சில...

Advertisment

போஸ் வெங்கட் கூறியதாவது; “இன்று வரைக்கும் என் ஒரு வருடச் சாப்பாட்டில் 2டி, ட்ரீம் வாரியர்ஸ் என அவர்களின் மூன்று செக்காவது இருக்கும். நான் அவங்ககிட்டத்தான் சொல்கிறேன் மன்னிப்பு கேளுங்கள் என. நான் பேசிட்டுதான் இருக்கிறேன். என்னுடைய கருத்தும் அதுதான் என்பதையும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த பிரச்சனை முடிவடைய வேண்டும் என யார் நினைத்தாலும், சூர்யா, அன்புமணி ஆசைப்பட்டாலும், ஒன்னே ஒன்னு தான், அவர் பேசுவது அவருக்காக அல்ல,அவங்க மக்களுக்காகத்தானே பேசுகிறார்.

Advertisment

நீங்க, ஜெய்பீம் படத்தை விழுப்புரம் என்பதால் வன்னிய மக்களை வைத்துச் சித்தரித்து பண்ணினோம் என்றால், அந்த விழுப்புரம் பக்கம் இருக்கிற 40 தியேட்டர்களில் யார் படம் பாக்க வருவாங்க? விழுப்புரம், பாண்டிச்சேரி சுற்றி உள்ள அத்தனை மாவட்டங்களிலும் உங்கள் படம் சூப்பர் ஹிட், எல்லாமே வன்னியர்கள் தானே பார்த்தார்கள். உங்களுக்குக் காசு கொடுக்கக்கூடிய மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் படாட்டியுமே என்னை மனிச்சுடுங்க என்பதில் என்ன குறைச்சல் ஆகிவிடபோகிறது. மன்னிப்பு கேட்டுவிட்டார் எனத் தலைவர்கள் எல்லாம், ஒதுங்கிவிடுவார்களா, மக்கள் ‘எங்க சூர்யா, எங்களுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டார்’ என்று மீண்டும் கூட்டம் கூட்டமாகப் போவார்களா? இது ப்ளஸ் தானே மைனஸ் இல்லையே.

சூர்யா, மன்னிப்பு கேட்டால் மக்கள் கதறித் துடித்துவிடுவார்கள். நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான், ட்விட்டர், ஃபேஸ் புக் என எது வாயிலாகக் கேட்டாலும்,’ வன்னிய இன மக்களை என்னுடைய திரைப்படம் மனதை புண்படுத்தியிருந்தால், என்னை மனித்து விடுங்கள்’ என்று கேட்டுவிட்டால் தலைவர்களுக்கே இங்கு வேலை இல்லை. எல்லாம் அவங்க அவங்க வேலையை பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

actor surya jai bhim
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe