தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக உருவாகி வருகிறது ‘இட்லி கடை’ படம். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் நடித்தும் உள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Advertisment

இப்படத்தில் இருந்து இதுவரை ‘என்ன சுகம்’, ‘எஞ்சாமி தந்தானே’ என இரண்டு பாடல்கள் ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறது. இப்படம், அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. 

இந்த நிலையில் படத்திலிருந்து கதாபாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளது. முதலாவதாக படத்தில் இருந்து அருண் விஜய், கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இவர் அஷ்வின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் துபாயில் புர்ஜ் கலிஃபா பில்டிங் பின்னணியில் அருண் விஜய் நிற்கிறார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ஒரு தகவல் இருப்பது குறிப்பிடத்தக்கது.