Advertisment

"ஒரு சீட் கொடுத்தவுனே திமிரு வந்துடுச்சு பாத்தியா...:" - வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக்

Idiot Sneak Peek goes viral

அரசியலை விமர்சித்து வசனங்கள் வைப்பதும், கலாய்ப்பதும் தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல.எம்.ஆர் ராதா காலத்தில் இருந்து தற்போது வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் தற்போது சிவா நடிப்பில் ஏப்ரல் 1-ஆம் தேதி திரையில் வெளிவரவிருக்கும் படம் 'இடியட்'. இதனையொட்டி இப்படத்தினுடையஸ்னீக் பீக் வெளியாகிவுள்ளது.

Advertisment

அந்த வீடியோவில், ஒரு சீட் குடுத்தவுனே திமிரு வந்துடுச்சு பாத்தியா...என்று இடம்பெற்றுள்ள வசனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த வசனம் யாரையோ குறிப்பிட்டு கலாய்ப்பது போல உள்ளது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

Advertisment

இப்படத்தை லொள்ளு சபா, தில்லுக்கு துட்டு பாகம் 1 மற்றும் 2 படங்களை இயக்கிய ராம் பாலா இயக்குகிறார். நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, ரவி, அக்ஷரா கௌடா போன்ற ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். காமெடி கலந்த திகில் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe