/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/897_0.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி, ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். ‘இடி முழக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின்ஃபர்ஸ்ட் லுக் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகுஇப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)