naveen

Advertisment

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தைதிருடாதே' சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள் நவீன், ஹீமா பிந்து. மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தினைக் கொண்டுள்ள இந்த சீரியல், இதுவரை 300 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக கரோனா லாக்டவுன் காலத்தில் ரசிகர்களிடையே கிடைத்த கூடுதல் கவனம், சீரியலை வைரல் ஹிட்டாக்கியது. இந்த நிலையில், நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக படப்பிடிப்பு தளத்தில் இருந்த நவீன், பிந்துவைச் சந்தித்து உரையாடினோம்.

முதல் எபிசோட்ல முதல் ஷாட் நியாபகம் இருக்கிறதா?

முதல்ல எடுத்தவுடனேயே ரொமான்ஸ் சீன்தான் கொடுத்தாங்க. எங்க ரெண்டு பேருக்குமே அதுதான் முதல் தடவை என்பதால் ரொம்ப காமெடியாகத்தான் அதைப் பண்ணோம்.

பிந்துவின் நடிப்பை பார்த்து நவீன் வியந்த தருணம்?

50 எபிசோட் தாண்டுனதுமே அவங்க நடிப்பில் நிறைய மாற்றம் தெரிய ஆரம்பித்தது. கொடுக்கிற ரியாக்ஸன் எல்லாத்தையுமே முழுமையா உள்வாங்கி நல்லா கிளாரிட்டியா பண்ணுவாங்க. அதுதான் அவங்களோட பலம்.

Advertisment

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="18216843-43df-447a-9f7d-260d3b29fd51" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_33.jpg" />

உங்களது நடிப்பு பற்றி கூறுங்கள் பிந்து?

செட்டுல எல்லாரும் கொடுக்குற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் அதுக்கு காரணம். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குமா... நல்லா பண்ணுறன்னு இயக்குநர் உட்பட எல்லாரும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நமக்கு ஆர்வம் இருக்குதோ இல்லையோஇதுமாதிரி மத்தவங்க பாராட்டும்போது நல்லா நடிக்கணும்னு தோணும்.

வெளியே போகும் போது ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?

ரொம்ப சிறப்பான வரவேற்பு கிடைக்குது. ஒருநாள் ரோட்ல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். அந்த வழியா வந்த ஒரு ஆண்ட்டி, ‘நான் உன்னோட பெரிய ரசிகை’ என்றார். ‘அந்தப் பழைய சிவாதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’னு சொன்னாங்க. இது மாதிரி நிறைய பேர் சொல்லியிருக்காங்க. அந்தப் பழைய ரவுடி சிவாவைத்தான் நிறைய பேருக்குப் பிடிச்சிருக்கு.

Advertisment

சீரியலைத் தாண்டி நவீன், பிந்து இருவருக்கும் வேறு ஏதாவது இலக்கு இருக்கிறதா?

நவீன் - எனக்கு வேற ஒரு இலக்கு இருக்குது. இந்த மாதிரி ஒரு நடிகர் இருக்காருன்னு எல்லாருக்கும் தெரியணும் என்பதற்காக இந்தத் தளத்தை பயன்படுத்திக்கொண்டேன். இப்ப நல்லாவே வெளிய ரீச் ஆகிட்டேன். விரைவில் படம் பண்ணனும்; பண்ணுவேன்.

பிந்து - படத்துல நடிக்கணும்னுதான் எனக்கு ஆசை. காலேஜ் முடிச்ச உடனே இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப குறுகிய காலத்துலயே இவ்வளவு பெரிய இடத்தை ரீச் பண்ணியிருக்கிறேன். என் அம்மாதான் என்னுடைய பலம். என்ன பிரச்சனை வந்தாலும் அவங்கதான் பாத்துக்குறாங்க. ஒரு பெண்ணா இந்த வயசுல இவ்வளவு சாதித்தது எனக்குப் பெரிய விஷயம்தான்.

alt="trip" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9c80ee37-44e7-4055-a63a-e8c74fdf385f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip.jpg" />

இந்தப் பயணத்தைத் திரும்பி பார்க்கையில் எப்படி இருக்கு நவீன்?

ரொம்ப மனநிறைவாக இருக்கு. சாதிச்சிரலாம்னு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இந்த வெற்றியைப் பார்ப்பதற்கே பத்து வருடம் ஆகியிருச்சு. பகத் ஃபாசிலோட நடிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குனு எங்க வீட்டுல சொன்னேன். யாருமே நம்பல. நான் பொய் சொல்லிட்டு கேரளாவுக்கு டூர் போறேன்னு நினைச்சாங்க. அது உண்மைன்னு தெரிஞ்ச பிறகுதான், வீட்டுல உள்ளவங்களுக்கும் என் மேல நம்பிக்கை வந்தது.

உங்க வளர்ச்சியை வீட்டில் உள்ளவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

ஒருநாள் சாதிப்பான்; ஜெயிச்சிருவான்னு என் குடும்பத்துல உள்ளவங்க முழுமையா நம்புனாங்க. என்னோட இந்த வளர்ச்சி இன்றைக்கு அவங்களுக்கு முழு திருப்தியைத் தந்திருக்கு.