“ஆகஸ்ட்டில் தியேட்டர்கள் திறக்கலாம்”- தகவல் & ஒளிபரப்பு துறை அமைச்சகம் பரிந்துரை

theatre

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. முற்றிலுமாக சினிமா ஷூட்டிங் நடைபெறவில்லை மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் திறக்கப்படாததால் முக்கியமான படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதுமுள்ள திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதை இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்பாக நடந்த உள்ளரங்கு கூட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் அமித் கரே உறுதி செய்துள்ளார்.

ஆகஸ்ட் 1லிருந்து ஆகஸ்ட் 31க்குள் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று, தான் பரிந்துரைத்துள்ளதாக அவர் அக்கூட்டத்தில் கூறியுள்ளார். அதோடு ஒவ்வொரு சீட் வரிசைக்கும் இடையில் ஒரு வரிசை காலியாக விடப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு சீட்டுக்கும் இடையே 2 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட திரையரங்க அதிபர்கள் அமித் கரே, நிபந்தனைகளுக்குஎதிர்ப்பு தெரிவித்ததாகவும், 25 சதவீத பார்வையாளர்களோடு படங்களை திரையிடுவது திரையரங்கு மூடப்பட்டிருப்பதை விட மோசமானது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

theatre
இதையும் படியுங்கள்
Subscribe