Advertisment

அதை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்... தொடர் போராட்டத்தில் 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி

sri reddy

Advertisment

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீதும் ஸ்ரீரெட்டி செக்ஸ் புகார் கூறினார். இப்படி அவர் தொடர்ந்து தெலுங்கு சினிமா பிரமுகர்கள் மீது குற்றம்சாட்டி வருவதால் தெலுங்கு சினிமா உலகில் சலசலப்பு ஏற்பட்டு அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மேலும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலர் ஸ்ரீரெட்டியின் நடவடிக்கைகளை கண்டித்தும் வருகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது புதியதாக பாலியல் புகார் குறித்த எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... "திரையுலகில் எனக்கு யாரும் ஆதரவாக இல்லை. நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் பல சினிமா பிரமுகர்களின் அந்தரங்க ரகசியங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவேன். நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லையை கண்டித்து எனது போராட்டம் தொடரும்" என 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி எச்சரித்துள்ளது தெலுங்கு சினிமா உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

srileaks srireddy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe