/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-7_16.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு தனது மனைவியை இமான் சட்ட ரீதியாக விவாகரத்து செய்தார். பின்பு அமலி என்பவரை டி.இமான் சமீபத்தில் மறுமணம் செய்துகொண்டார். இந்த திருமண நிகழ்வில் இமானின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அந்த பதிவு உருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதோடு தன் இரு மகள்களை மிஸ் பண்ணுவதாகவும், அவர்கள் என்றாவது ஒருநாள் வீட்டிற்கு வருவார்கள் எனவும் கூறியிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் இமானின் மறுமணம் குறித்து தன் கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான பதிவில், " அன்புள்ள இமான், உங்களது இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துகள். 12 வருடம் உங்களுடன் வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற ஒரு நபரிடம் எனது நேரத்தை வீணடித்தது எனது முட்டாள்தனம் என நினைக்கிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன். உங்களின் குழந்தைகளை கடந்து இரண்டு வருடமாக நீங்கள் சரியாக கவனித்து கொள்ளவில்லை. ஆனால் அதற்குள் அவர்களுக்கு பதிலாக புதிதாக ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது. உங்கள் அப்பாவிடம் இருந்து என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் பாதுகாப்பேன். இனிய திருமண வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பே இப்பதிவு வெளியான நிலையில் தற்போது தான் சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. மேலும் பதிவில் மோனிகா ரிச்சர்ட் குறிப்பிட்டிருக்கும் சில வரிகள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)