Skip to main content

'விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் அறிக்கை

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

'I will not worry about the consequences' - Keerthi Suresh statement

 

கீர்த்தி சுரேஷ், 2015-ல் வெளியான 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். 2018-ல் வெளியான 'மகாநதி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அந்த ஆண்டின் 'சிறந்த நடிகை'-க்கான தேசிய விருது பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சாணிக் காயிதம்' மற்றும் 'சர்காரு வாரி பாட்டா' படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக 'சாணிக் காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். 

 

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " ஒரு நடிகராக இருப்பது ஒரு கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம், அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றியுணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது, 'சாணி காயிதம்' மற்றும் 'சர்காரு வாரி பாட்டா' படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது " என குறிப்பிட்டு 'சாணி காயிதம்', 'சர்காரு வாரி பாட்டா' படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

மேலும், "நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளைப் பற்றி கவலைப் பட மாட்டேன்" என்றும் குறிப்பிட்டு அவர் பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அனைவருக்கும் இந்த அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்