I will not act in films again Minister Udayanidhi

நடிகரும்சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது 'மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறார். , இப்படத்தில் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தைத்தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை 'கிடாரி' படம் மூலம் கவனம் ஈர்த்த முருகன் பிரசாத் இயக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது .

Advertisment

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார். அவரது நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படமே கடைசி படமாக வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment