Advertisment

"அந்தப் படத்தில் அவரது திறமையைப் பிரம்மித்து பார்த்திருக்கிறேன்" - நடிகர் பாக்யராஜ் பேச்சு

publive-image

'Trident Arts' ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

Advertisment

விழாவில் பேசிய நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ், "கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு. அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம். அந்தப் படத்தில் அவரது திறமையைப் பிரமித்து பார்த்திருக்கிறேன். அதேபோல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்குத்தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம் பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள், அது உண்மையான கருத்து. இந்தப் படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர். கும்கி படத்தில் அவரைப் பார்த்து பிரம்மித்தேன். இந்தப் படம் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்" என்றார்.

Advertisment

அதைத் தொடர்ந்து பேசிய நடிகை கோவை சரளா, "இந்தப் படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதைக் கேட்டு, அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றிகள்" எனக் கூறினார்.

bakyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe