Advertisment

publive-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் 'விக்ரம்' திரைப்படம் வெளியான 3 நாளில் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'விக்ரம்' படத்திற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், " வணக்கம், தரமான திரைப்படத்தை தாங்கி பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான தரமான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் விக்ரம் படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்" என கூறி விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் " கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன் " என குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.