Advertisment

"நயன்தாரா கூட நடிக்கணும்னு ஆசை" - ஜி.பி.முத்து கலகல பேச்சு

publive-image

வீரா சக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து நடித்துள்ளார். ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கிய ஆர்.யுவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

Advertisment

'ஓ மை கோஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (02/11/2022) மாலை 05.30 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சன்னி லியோன் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர்.

Advertisment

விழாவில் பேசிய ஜி.பி.முத்து, "இது தான் எனக்கு முதல் படம். டைரக்டர்ட்ட சொன்னேன், சார் இதுக்கு முன்னாடி நான் எந்த படமும் நடிச்சது கிடையாது. சின்ன சின்ன ஷார்ட் பிலிம் டிக்டாக்கெல்லாம் போட்ருக்கேன். எனக்கு பயமா இருக்குனு. அதுக்கு, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் சொல்ற படி நடிங்க. சூப்பரா இருக்கும்னாங்க.சொல்லி தந்தமாதிரி நான் நடிச்சேன்.

சன்னி லியோன் யாருனு தெரியாது எனக்கு. சன்னி லியோன் யாருனு சொல்லி ஆனந்த் சில படத்தயெல்லாம் காமிச்சான். அய்யயோ...படம்னா... சன்னி லியோன் படம்னா, என்ன படம்னு காமிச்சான். மத்த படி தப்பா நினைக்காதீங்க. சன்னி லியோனும்நானும் சேர்ந்து நடிக்கற மாதிரி சான்ஸ்இருந்துச்சு. என்நண்பன் இறந்ததுனால அதுல வர முடியாம போச்சு.

படத்துல எனக்கு சூப்பர் கேரக்டர் தந்தாங்க. அந்த டாக்டர் பேர கேட்டாவே எனக்கு சிரிப்பா இருக்கு. அந்த படத்துல பாருங்க. டாக்டர் கேரக்டர் புரியும் உங்களுக்கு. ரொம்ப நல்லாருந்துச்சு. டைரக்டர் சார்.. ரொம்ப சந்தோசம் எனக்கு. முத முத பட வாய்ப்பைக் கொடுத்ததுக்கு உங்களமறக்கவே முடியாது கண்டிப்பா. நயன்தாரா, சிம்ரன் கூட நடிக்கணும்னு ஆசையா இருக்கு" என கலகலப்பாகப் பேசினார்.

sunny leone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe