Advertisment

அமெரிக்க அதிபரை நேர்காணல் பண்ணனும்...ஹிந்தி ஹீரோவை கலாய்க்கும் தமிழ் ஹீரோ...

தமிழில் பாய்ஸ், ஆய்த எழுத்து, அவள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சித்தார்த். இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழி படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி, சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருவார்.

Advertisment

trump

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் அக்‌ஷய் குமார் பிரதமர் மோடியை வைத்து ஒரு நேர்காணல் ஒன்றை எடுத்தார். இது பல தரப்புகளில் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பான அன்றே சித்தார்த் ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்தார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

மோடியை அக்‌ஷய்குமார் நேர்காணலிட்டதை கலாய்க்கும் விதமாகதான் சித்தார்த் இந்த பதிவை பதிவு செய்துள்ளார் என்று ட்விட்டரில் சொல்லப்படுகிறது.

akshay kumar sidharth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe