‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில்தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் போனி கபூர்தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறார் என்று முன்னரே அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Advertisment

neetu chandra

நேர்கொண்ட பார்வை இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக். அது வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. தற்போது, அடுத்த படத்துக்காக அஜித்திடம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் எச்.வினோத் என்றும், அந்தப் படத்தை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ட்விட்டரில், “நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தேன். நடிப்பில் அஜித் மிரட்டியிருக்கிறார். விரைவில் இந்திப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்காக 3 ஆக்‌ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றையாவது தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

Advertisment

இந்த பதிவுக்கு பதில அளித்த நடிகை நீத்து சந்திரா, ‘சூப்பர் ஸ்டார் அஜித்குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவரை பாலிவுட்டில் நடிக்க சம்மதிக்க வையுங்கள். அது இந்தி சினிமாவுக்கே பெருமை. உங்களுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். தமிழில் மாதவனுடைய யாவரும் நலம், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.