Advertisment

“தமிழ் சினிமாவுல பொற்காலமா நான் நினைக்கிறேன்” - நடிகர் சிம்பு பேச்சு

publive-image

Advertisment

'வெந்து தணிந்தது காடு' படத்தின் 50வது நாள் வெற்றி விழா சென்னையில் நேற்று (09/11/2022) மாலை நடைபெற்றது. விழாவில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நடிகர் சிம்பு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி K.கணேஷ், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் சிம்பு, "உதய் அண்ணா ரொம்ப தேங்க்ஸ். ஏன்னா இந்த படம் ரிலீஸ்க்குவரும் போது, நல்லா கொண்டு போய் ரிலீஸ் பண்ணனும்கிறபோது, உதய் அண்ணாகிட்ட பேசுன உடனே கண்டிப்பாஉனக்காக நான் பண்றேனு சொன்னாரு. அதுக்குரொம்ப தேங்க்ஸ் அண்ணா. எல்லாருக்கும் நான் நன்றி தான் சொல்ல விரும்பறேன். எண்டயர் டீம், கௌதம் சாருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கறன். என்னோட மொத்த டீம் எல்லாருக்கும் ரொம்ப ஹாப்பி, எல்லாரோட ஒர்க் பண்ணதுல ரொம்ப சந்தோசம்.

அந்த 'மல்லிப்பூ' சாங் சூட்டிங்லகேட்ட அன்னைக்கே வந்துட்டு மெயில் பண்ணிட்டேன். இந்த பாட்டு ஒரு பெரிய ஹிட் ஆகும்னுநினைக்கிறேனு. எண்டயர் டீமுக்கும் நன்றியைத் தெரிவிச்சிக்கறன். வேல்ஸ் பொறுத்த வரைக்கும், ஐசரி கணேஷ் பொறுத்த வரைக்கும், எப்படி எங்க அப்பா வந்து, சிம்பு சினி ஆர்ட்ஸ் இருந்ததோ, அந்த மாதிரி எனக்கு இன்னொரு புரொடக்சனா வேல்ஸ் தான் சொல்லுவேன். அந்த அளவுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி, எனக்கு இந்த படத்துல வந்து நல்லாபழகுவதற்கான வாய்ப்பு கிடைச்சிச்சு. ரொம்ப நன்றிண்ணே.தேங்க் யூ சோ மச்.

Advertisment

ஒரு விஷயம் இங்க என்ன சொல்லிக்க ஆசைப்படுறேனா, முன்னாடி வந்து பொதுவா சொல்லுவாங்க.இந்த மாதிரி சினிமா பண்ணும் போது, இந்த மாதிரி கதைவந்து நம்மால எடுக்க முடில. இந்த மாதிரி படம் மக்களுக்கு புரியுமா? அப்படினு நிறைய டைரக்டர் பேசி, புரொடியூசர்ஸ் பேசி நான் பாத்துருக்கேன். ஆனா இந்த ஒரு பீரியட் வந்து தமிழ் சினிமாவுல பொற்காலமா நான் நினைக்கிறன். ஏன்னா, ரீசண்டா பாத்தீங்கனா, எல்லா படமுமே வந்து ரொம்ப நல்லா போயிட்டுஇருக்கு. விக்ரம்ல இருந்து பொன்னியின் செல்வனாகட்டும், கர்நாடகாவுல காந்தாராவா இருக்கட்டும், லவ் டுடேனு இப்ப ஒரு படம் வந்துருக்கு. எதுக்கு இத சொல்றனா, முன்னாடி எல்லா டைரக்டர்ஸுக்கும் ஒரு கனவு இருந்திருக்கும். அந்த கனவெல்லாம் நனவாக்கக் கூடிய, நிறைவேற்றக் கூடிய நல்ல ஒரு பீரியடா நான் இத பார்க்கறேன். இத நம்ம தமிழ் சினிமா பயன்படுத்திக்கணும், மக்களும் ரசிச்சிப் படம் பாக்க ட்ரைபண்றாங்க. வித விதமான படங்கள் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.

வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸுக்கு முன்னாடி, ஒரு சின்ன பயம் இருந்தது. ஏன்னா ஃபுல் அன் ஃபுல் அவுட் அன் அவுட் கமெர்சியல் படமாவோ, ஒரு ஹீரோவாவந்து, அந்த மாதிரியான ஒரு ஆஸ்பெக்ட் எதுமே இல்ல. நான் இந்த படத்துக்கு பாத்தீங்கன்னா, அந்த முத்துவாவே தெரியனுங்கறதுக்காக, ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருந்தேன். அந்த ஒரு பயம் இருந்தது. ஆனா வித்தியாசமான படங்கள வந்து ரசிக்கக் கூடிய அந்த தன்மை மக்களுக்கு வந்துருக்கு. இந்த படத்துக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்ததே, எங்க எல்லாருக்கும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ரொம்ப நன்றி". இவ்வாறு நடிகர் சிம்பு தெரிவித்தார்.

actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe