Skip to main content

"தளபதி 67 இல்லனா தளபதி 77 பண்றேன்" - விஜய்க்கு கதை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி மகிழ்ச்சி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

"I make thalapathy 67 or thalapathy 77" - RJ Balaji told the story to Vijay

 

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி 'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்' உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியில் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கான 'வீட்ல விசேஷம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கியுள்ள இப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளனர்.

 

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி, விஜய்யிடம் ஒரு கதை கூறியுள்ளார். இதனை 'வீட்ல விசேஷம்' படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். 'வீட்ல விசேஷம்' படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழு இன்று சக்சஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், " இந்த வருடம் ஜனவரி மாதம் விஜய் சாருக்கு கதை சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் இது ஒரு பெரிய வாய்ப்பு. இரண்டு மாதம் கதை ரெடி பண்ணி 40 நிமிடம் அவரிடம் இந்த கதையைப் பற்றிய ஒரு ஒன் லைன் சொல்ல முடிந்தது. நான் சொன்ன ஒன் லைன் அவருக்குப் பிடித்திருந்தது. 

 

அதைத் தொடர்ந்து, அவர் என்னிடம் 'நான் உங்க ஸ்டைலில் ஒரு குடும்ப காமெடி படமாக எதிர்பார்த்தேன், இது ரொம்ப பெருசா இருக்கே. எவ்ளோ டைம் ஆகும் கதை எழுத' எனக் கேட்டார். ஒரு வருடம் ஆகும் சார் எனச் சொன்னேன். ஒரு வருஷமா எனக் கேட்டார். ஆமா சார், நாங்கள் தற்போது 'வீட்ல விசேஷம்' என்ற ஒரு ரீமேக் படத்தை எடுத்து வருகிறோம். அந்த படத்தின் கதையை எழுத ஐந்து மாதம் ஆனது. உங்களைப் போன்ற பெரிய ஸ்டாரை வைத்து எடுக்கும் போது கண்டிப்பா ஒரு வருடம் தேவை படும். அது நான், நீங்கள் மற்றும் பார்ப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிடிக்கணும். அந்த நோக்கத்தோடு எழுதுவதற்குக் கண்டிப்பா ஒரு வருடம் தேவை படும் எனக் கூறினேன். உடனே விஜய் சார், இது மட்டும் இல்லப்பா எதுவேனாலும், எப்பவேணாலும் வந்து சொல்லு என கூறினார். எந்த அவசரமும் இல்ல சார், 'தளபதி 67' இல்லனா 'தளபதி 77' அல்லது 'தளபதி 87' பண்றேன் எனச் சொன்னேன்' என்று விஜய்யுடன் நடந்த நிகழ்வை ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்