'I look forward to seeing you again in 20 years' - Kamal Haasan tweeted

Advertisment

'விஸ்வரூபம் 2' படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மே 18-ஆம் தேதி பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் ட்ரைலர் திரையிடப்பவுள்ளது.

கமல்ஹாசன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் இந்தி பதிப்பு ப்ரோமோஷனில் கவனம் செலுத்தி வரும் கமல், அங்கு பிரபலமான 'கபில்சர்மா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இது குறித்து கபில்சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், " கனவு நிறைவேறிவிட்டது. திரையுலகின் லெஜெண்ட் கமல்ஹாசன் அவர்களுடன் அருமையான நேரங்களை செலவளித்துள்ளேன். அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாது சிறந்த மனிதரும் கூட . எங்கள் ஷோவில் கலந்து கொண்டமைக்கு நன்றி சார். உங்கள் விக்ரம் படத்திற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

கபில்சர்மா டீவீட்டை ரீடீவ்ட் செய்த கமல்ஹாசன், " உங்களுடன் என் நேரத்தை சிறப்பாக செலவழித்தேன். நீங்கள் சிறந்த திறமை கொண்ட சிறந்த குழுவை வைத்துள்ளீர்கள். உங்கள் ஷோ 20 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் இந்த செட்டை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன். இடையிலும் நாம் சந்திப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment