publive-image

நடிகையாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பிரச்சனை குறித்தும் அரசியலை விமர்சனம் செய்தும் தைரியமாக தன் கருத்துக்களை முன்வைப்பவர் கங்கனா ரணாவத். 'தலைவி' படத்தை தொடர்ந்து ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் 'தாகட்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் ராம்பால், தியா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபக் முகுத், சோஹெல் மக்லாய் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷங்கர் எஹ்சான் லாய் உள்ளிட்ட மூன்று பேர் இசையமைத்துள்ளனர். கங்கனா ரணாவத் உளவாளியாக நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் மே 20-ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இந்நிலையில் 'தாகட்' படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், படத்தின் ட்ரைலரில் வருவது போல நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் 'டாம்பாய்' கேர்ள் தானா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கங்கனா , "உண்மையில் நான் அப்படி இல்லை, நிஜ வாழ்க்கையில் யார் ஒருவர் இப்படி அடிப்பார்கள். 'கங்கனா ரணாவத் நிஜ வாழ்க்கையிலும் தப்பு செய்யும் ஆண்களை அடிப்பார்' என உங்களைப் போன்றோர் வதந்தி பரப்புகிறார்கள். இது போன்ற வதந்திகளால் தான் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை" என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Advertisment