Advertisment

'வட போச்சே'... டிராஃபிக் ராமசாமி பட விழாவில் ஷங்கர் ருசிகரம் 

shankar

கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் டிராஃபிக் ராமசாமியாக நடிக்கும் 'டிராஃபிக் ராமசாமி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

அப்போது விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசும்போது... "டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்" என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/DE6GQ3dxKzc.jpg?itok=zfwSesf9","video_url":" Video (Responsive, autoplaying)."]}

2.0 aishwaryarai amyjackson rajinikanth sachandrasekar shankar trafficramaswamy sac
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe