Advertisment

'அமிதாப்பச்சனுக்கு யார் அழுத்தம் தருகிறார்கள் எனத் தெரியவில்லை ' - கங்கனா ரணாவத் வருத்தம்

'I don't know who is pressured Amitabh Bachchan' - Kangana Ranaut

கங்கனா ரணாவத் நடிப்பில் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'தாகட்'. ரஸ்னீஷ் காய் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் ராம்பால், தியா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபக் முகுத், சோஹெல் மக்லாய் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷங்கர் எஹ்சான் லாய் உள்ளிட்ட மூன்று பேர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரிலீஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் அமிதாப் பச்சன் 'தாகட்' படத்தின் பாடலின் டீசரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு தம்ஸ் அப் எமோஜி குறிப்பிட்டு படத்திற்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். பதிவிட்ட சில நிமிடங்களிலே அதனை நீக்கிவிட்டார். இது தொடர்பாக கங்கனா ரணாவத் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நிச்சயமாக, விருப்பு வெறுப்புகள் இருக்கிறது. ஆனால் இந்த செயல் மிகவும் வியக்க வைக்கிறது. அமிதாப் பச்சன் அவர்கள் டிரெய்லரை பகிர்ந்தார். பின்பு அதை சில நிமிடங்களில் நீக்கிவிட்டார். பெரிய அந்தஸ்தில் இருக்கும் அவருக்கு யாருடைய அழுத்தம் இருக்கும் என எனக்கு தெரியவில்லை. இந்த சூழ்நிலையை நான் கொஞ்சம் சிக்கலானதாக பார்க்கிறேன்." என பேசியுள்ளார்.

Advertisment

மேலும், "நல்ல படங்களை ப்ரொமோட் செய்வதில் முதல் ஆளாக நான் நிற்கிறேன். சமீபத்தில் வெளிவந்த 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' போன்ற படங்களை பாராட்டியுள்ளேன். ஆனால் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் 'தாகட்' பட ட்ரெய்லரைப் பாராட்டவில்லை" என கூறியுள்ளார்.

Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe