"அது எனக்கும் தெரியவில்லை" - தனுஷ் விளக்கம்

publive-image

தனுஷ்ஹாலிவுட்திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'திகிரேமேன்'.அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியரூசோபிரதர்ஸ்இப்படத்தை இயக்குகின்றனர்.கிறிஸ்ஈவான்ஸ்,ரயன்காஸ்லிங்இவர்களுடன் இணைந்துதனுஷும்இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் குறிப்பிட்ட திரையரங்குகளில் வருகிற 15-ஆம் தேதியும்,நெட்ஃப்ளிக்ஸ்ஓடிடிதளத்தில் வருகிற 22-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'திகிரேமேன்' படக்குழு தற்போதுப்ரோமோஷன்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்ரூசோபிரதர்ஸ், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போதுதனுஷிடம்நீங்கள் எப்படி 'திகிரேமேன்' படத்தில் இணைந்தீர்கள்எனக்கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குபதிலளித்த தனுஷ், " இந்த படத்தில் எப்படி நான் இணைந்தேன் என்று எனக்கும் தெரியவில்லை. ஒரு நாள்காஸ்டிங்நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் ஒருஹாலிவுட்படம், மிகப்பெரியப்ராஜெக்ட்விரைவில் பதில் கூறுங்கள்எனத்தெரிவித்தனர். பின்புபடத்தைப்பற்றிய முழுதகவல்களைகூறுங்கள் என்று கேட்டேன், சொன்னார்கள். கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்"எனப்பேசினார். இது தொடர்பானவீடியோசமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

actor dhanush
இதையும் படியுங்கள்
Subscribe