எனக்கு தலைக்கனம் கிடையாது - ஷாலினி பாண்டே

sh

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த பிரீத்தி என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமடைந்த ஷாலினி பாண்டே தற்போது மகாநதி, 100% காதல், கொரில்லா ஆகிய தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் அவர் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிப்பதை பற்றி பேசும்போது.... "அர்ஜுன்ரெட்டி படத்தில் நடித்த பிரீத்தி கதாபாத்திரம் மூலம் நான் பிரபலமாகி இருக்கிறேன். பெரும்பாலான மக்களிடம் என்னை அது கொண்டு சேர்த்து இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னை பிரீத்தி என்று தான் மக்கள் அழைக்கிறார்கள். அதைக்கேட்டு நான் உணர்ச்சி வசப்படுகிறேன். மக்களின் அன்புக்கு அடிமையாகி விட்டேன். என்றாலும், அந்த படத்தின் மூலம் கிடைத்த புகழ் மூலம் நான் தலைக்கனம் கொள்ளவில்லை.நான் எப்போதும் போலவே இருக்கிறேன். தெலுங்கு மக்களை கவர்ந்தது போல, நான் நடித்து வரும் தமிழ் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும். அதுதான் இப்போது எனது நோக்கம். நிச்சயம் இடம் பிடிப்பேன் என்று நம்புகிறேன்" என்றார்.

shalinipandey gorilla jeeva
இதையும் படியுங்கள்
Subscribe