
நடிகர் பரத் மற்றும் நடிகை வாணிபோஜன் நடித்துள்ள 'மிரள்' திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (04/11/2022) நடைபெற்றது.
விழாவில் பேசிய திரைப்பட நடிகர் பரத், "ஒரு பெர்ஃபெக்ட்டான எக்ஸ்பீரியன்ஸ் இந்த படம். 20 டேஸ், 20 டேஸ்ஸுனு சொல்றாங்க. இந்த 20 நாள்ல 40 நாள் உழைப்பு இருக்கு அதுல. தூங்காத இரவுகளெல்லாம் நிறையாவே இருக்கு. என்ன ப்ராடக்ட் வேணுமோ அதை ரொம்ப அழகா, கன்வின்சிங்கா எடுத்திருக்கோம். இந்த படம் நீங்கப் பாக்கும் போது ஒரு பேய் படமாவும், த்ரில்லராவும் எல்லாமே இருக்கு. இந்த படத்தில் லாட் ஆஃப் எமோஷன்ஸ் இருக்கிறது. நிறைய விசயங்களை சொல்லிருக்கோம். நம்ம சுத்தி நடக்கிற ஒரு விசயத்த, நாம்ம ரொம்ப கூர்மையா கவனிக்கனும். அந்த மாதிரியான நிறைய விசயங்கள் இந்த படத்துல இருக்கு. ஃபேமிலிக்கான படம் தான் இது.
சக்தி கீப் கோயிங். இதே குவாலிட்டியை மெயின்டயின் பண்ணிக்கோங்க. இன்றைய வரைக்கும் புரொடுயூசர் ஃப்ரண்ட்லி அப்படினா, ரவிக்குமார் சார் மாதிரி இருக்கவே முடியாது. ஒரு படத்த சொன்ன பட்ஜெட்டுல, சொன்ன டைம்ல, ஒரு ஆர்ட்டிஸ்ட எடுத்து, நான் நிறையா கேள்விப்பட்ருக்கேன். அந்த டேட்ல எடுத்து, அந்த டைம்ல அனுப்புனும்னா அனுப்பிடுவாரு. அவரு கூட நடிச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோசம். ரவிக்குமார் சார் தாங்க்ஸ். வாணிபோஜன் மாதிரி ஒரு நல்ல ஆக்ட்ரெஸ் என் கூட நடிச்சதுனால தான் என்னால என்னோட பெஸ்ட்ட கொடுக்க முடிந்தது.
நல்ல தமிழ் பேசக் கூடிய, ஃப்ரண்ட்லியா இருக்கக் கூடிய கதாநாயகி. படம் பாக்கும் போது தெரியும், நாங்க இரண்டு பேரும் ஸ்டார்ட்டிங்ல இருந்து எண்ட் வரைக்கும் படத்த ஹோல்ட் பண்ணக் கூடிய களம் இது. சூப்பரா பண்ணிருக்காங்க படத்துல. என்னோட குட்டி பையன் ராம் கீத்தும் நடிச்சிருக்கான். அவனும் நைட் ஃபுல்லா தூங்காம, எங்க கூட இருந்து சூப்பரா நடிச்சிருக்கான். அவனுக்கு 7, 8 வயசுதான் ஆகுது. தியேட்டர்ல பாக்கும் போது புது எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். எந்த இடத்துல மியூசிக் வரனும். எந்த இடத்துல சைலன்ஸ் வரணும். சவுண்ட் டீம் உட்கார்ந்து ஒர்க் பண்ணிருக்காங்க. நிறைய மெனெக்கெடல்கள், நிறைய உழைப்பு, இந்த படத்துக்கு போயிருக்கு. நான் ஜெனியுனா நல்லப் படத்தைக் கொடுத்துருக்கிறேன்னு நம்புறேன்" எனக் கூறியுள்ளார்.