Advertisment

"திருமணம் எப்போது..? நான் தான் ப்ரொபோஸ் பண்ணேன்..." - நடிகர் கௌதம் கார்த்திக் கலகல பேச்சு

publive-image

சென்னையில் நேற்று (23/11/2022) நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Advertisment

அப்போது பேசிய நடிகர் கௌதம் கார்த்திக், "செய்தியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.இங்க வந்ததற்கு மிக்க நன்றி. ரொம்ப நாளாச்சு உங்களஎல்லாம் சந்திச்சு.இன்னைக்கு ஒரு குட் நியூஸ் ஷேர் பண்றதுக்காகத்தான் நாங்க கூப்பிட்ருக்கோம். குட் நியூஸ் என்னன்னா, வர நவம்பர் 28-ஆம் தேதி, எனக்கும்மஞ்சிமாவுக்கும் கல்யாணம் ஆகப் போகுது. இது ஒரு சின்ன ஃபேமிலி ஈவென்ட் தான். சென்னையில் தனியார் இடத்துல கல்யாணம் நடக்குது. அதனால உங்களமுன்கூட்டியே சந்திக்கிறோம். உங்களோட பிளஸ்சிங் எங்களுக்கு எப்போதுமே தேவை.

Advertisment

நான் இண்டஸ்ட்ரீலஸ்டார்ட் பண்ணதுல இருந்துநீங்க என் கூடவே இருந்திருக்கிங்க. 2013-ஆம் ஆண்டில் இருந்து என் கூடவே இருந்துருக்கீங்க. திருமணத்திற்குப் பிறகு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்." எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகை மஞ்சிமா மோகன், "எல்லாருக்கும் வணக்கம். ஜெனரலா டிஃப்ரென்ட் ஸ்டேட்ஸ்-ல இருந்து வரும் போது எப்போதுமே கொஞ்சம் பயம் இருக்கும். ஃபர்ஸ்ட் மூவி, ஃபர்ஸ்ட் டே-ல இருந்து எனக்கு எப்போதுமே அந்த லவ்விங்சப்போர்ட் இருந்துருக்கு. நவம்பர் 28-ஆம் தேதி அன்று காலை எங்களது கல்யாணம் நடக்க இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி கிடையாது. மிக எளிமையாகவும், சிறப்பாகவும் ஒரு வேளை மட்டுமே எங்களது நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. முடிஞ்ச வரைக்கும் புகைப்படங்கள் 12.00 மணி முதல் 01.00 மணிக்குள் உங்களுக்கு அனுப்ப முயற்சிக்கிறோம்." என்றார்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் கௌதம் கார்த்திக், "நான் தான் ப்ரோபோஸ் பண்ணணண். அவங்க ஒரு ரெண்டு நாள் டைம் எடுத்தாங்க. அந்த இரண்டு நாள் எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. பட் ஓகேன்னு சொல்லி அக்செப்ட் பண்டாங்க" எனத் தெரிவித்தார்.

celebrity marriages
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe