"நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன், அவர் தான் எனக்கு முன்னுதாரணம்" - துல்கர் சல்மான்

i am a big fan Shah Rukh Khan dulquer salman

துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு ராணுவ வீரருக்கும் இளவரசிக்கும் இடையேயான காதலை அழகாக சொல்லியிருக்கும் இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இந்தியிலும் வெளியானது.

இந்நிலையில் 'சீதா ராமம்' படம் இந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக அண்மையில் சக்ஸஸ் மீட் நடத்தியுள்ளனர் படக்குழுவினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துல்கர் சல்மான் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது , "நான் ஷாருக்கானுடைய மிகப் பெரிய ரசிகன். அவர் எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல். அவர் படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அவர் தான் எனக்கு முன்னுதாரணம்" எனக் குறிப்பிட்டு ஷாருக்கான் பற்றி நிறைய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார்.

துல்கர் சல்மான் தற்போது 'சுப் ; ரிவச்ஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட்' என்ற இந்தி படத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor Shah Rukh Khan Bollywood dulquer salman
இதையும் படியுங்கள்
Subscribe