Advertisment

'ஏ.ஆர். ரஹ்மானை கண்டு பிரமிக்கிறேன்' - மாதவன் ஆச்சர்யம்

 ' I am amazed to see A.R. Rahman '- Madhavan surprise

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் மே 17-ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் திரைபிரபலங்கள் கமல்ஹாசன், பா.ரஞ்சித், நவாசுதீன் சித்திக், ஏ.ஆர் ரஹ்மான், மாதவன், தமன்னா, ஊர்வசி ரவ்டலா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் அடங்கிய குழு கலந்து கொண்டுள்ளது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில் ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மாஸ்க் (குறும்படம்) திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ஏ.ஆர். ரஹ்மான் இயக்குநராக அறிமுகமாகும் ‘லி மஸ்க்’ குறும்படத்தை கேன்ஸ் விழாவில் பார்த்தபோது, எனது உணர்வுகள் அனைத்தும் உணர்ச்சி மிகுதியில் இருந்தது. அதற்கு நன்றி. ஒரு துறையின் பற்றிய அவரது புரிதல் மற்றும் ஒரு கருத்தை எவ்வாறு எல்லா வித கண்ணோட்டத்திலும்புதிய தொழில்நுட்பத்துடன் அணுகி பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டு பிரமிப்பாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ar rahman cannes film festival Madhavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe