கடந்த 2014ஆம் ஆண்டு ‘சதுரங்க வேட்டை’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். இந்த படத்தின் வெற்றியை அடுத்து வினோத் நடிகர் கார்த்தியை வைத்து மீண்டும் ஒரு உண்மை சம்பவங்களை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்றொரு படத்தை இயக்கினார். இப்படமும் முதல் படத்தை போலவே மாபெரும் ஹிட் அடித்து வினோத்திற்கு பெரிய இயக்குனர் அந்தஸ்தை கொடுத்தது.

Advertisment

h.vinoth

இதன்பின் சிறிய இடைவேளை எடுத்திருந்தார் வினோத். அக்கால கட்டத்தில் அவர் விஜய்க்காக கதை பண்ணுகிறார். அஜித்திற்காக கதை பண்ணுகிறார் என்ற பேச்செல்லாம் வந்தது. திடீரென ஒரு நாள் பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகவும் அதில் அஜித்தை ஹீரோவாக வைத்து ஹெச்.வினோத் இயக்குகிறார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. தற்போது அந்த படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து ட்ரைலரும் வெளியிடப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படமும் உலகம் முழுவதும் வெளியாகுகிறது.

இந்த படத்தை அடுத்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெச்.வினோத்தான் இயக்குகிறாராம். இது ஹெச்.வினோத் எழுதிய கதை என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் ஹெவ்.வினோத் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் யாரிடம் துணை இயக்குநராக இருந்திருந்தார் என்பதுதான்.ஹெச்.வினோத் 1994ஆம் ஆண்டே பார்த்திபன் இயக்கிய சரிகமபதநி படத்தில் துணை இயக்குநராக பணி புரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து புள்ளக்குட்டி என்ற பார்த்திபன் படத்திலும் வினோத் துணை இயக்குநராக பணி புரிந்துள்ளார். மேலும் விஜய் மில்டனிடமும் துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் வினோத்.