style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
'விஸ்வாசம்' படத்தை அடுத்து நடிகர் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அது ஹிந்தி படமான 'பிங்க்' படத்தின் ரீமேக் என்றும் சமீபத்தில் தகவல் வெளியாகி உலா வந்த நிலையில் எச்.வினோத் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து 'தல 59 படம் ரீமேக் இல்லை' என்று நேற்று ஒரு ட்வீட் வெளியானது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து வரும் நிலையில் தற்போது இந்த ட்வீட் குறித்து எச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி... "எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.