Advertisment

'பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும் தான் என்னை...' - வைரலாகும் பார்த்திபன் பட டீசர்

'Hunger and money is the problem for me ...' - Parthiban movie teaser goes viral

Advertisment

தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் வித்தியாசமான புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் பார்த்திபன். ‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்தில், படம் முழுவதும் தனி ஒருவராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார். இந்த படம் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 'சிறப்பு ஜூரி விருது' வாங்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கி நடித்திருக்கும் படம் 'இரவின் நிழல்'. முந்தைய படத்தை போலவே இந்த படத்திலும் ஒரு புது முயற்சியை கையாண்டுள்ளார். அதாவது, 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. Non Linear திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளார்கள்.

இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் டீசரை வெளியாகியுள்ளது. பார்த்திபன் கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வயது வாரியாக கூறுவது போல் இந்த டீசர் அமைந்துள்ளது. இதில் 'பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும் தான் என்னை எல்லா வயதிலேயும் வருத்திக்கிட்டே இருக்கு" என்று பார்த்திபன் பேசும் வசனம் அனைவரின் கவனத்தை பெற்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ACTOR PARTHIBAN ar rahman iravin nizhal
இதையும் படியுங்கள்
Subscribe