Advertisment

''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்!

vsaf

Advertisment

பாகிஸ்தானில் 97 பயணிகளுடன் சென்ற எர்பஸ் எ-320 ரக விமானம் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது குடியிருப்பு பகுதி அருகே விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் லாகூரில் இருந்து கராச்சி நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்த 97 பயணிகள் நிலை என்னவானது என்ற தகவல் இதுவரை முழுமையாகத் தெரியவில்லை. இதுவரை 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதி குடியிருப்பு பகுதி என்பதால் குடியிருப்பில் இருந்தவர்களும் இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'காலா' பட நடிகை ஹுமா குரேஷி இந்த விபத்து குறித்து சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்... ''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது. அனைவருக்கும் என் பிரார்த்தனைகள். பாதுகாப்பாக இருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

huma qureshi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe