ADVERTISEMENT

வலிமையில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்?

02:43 PM Jan 22, 2020 | santhoshkumar

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், அதனை தொடர்ந்து இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கின்றார்கள், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது போன்ற எந்தவொரு அறிவிப்பும் இன்றி ஷூட்டிங் நடைப்ற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வருட தீபாவளிக்கு படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக பிரசன்னா நடிக்க இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. தற்போது பிரசன்னா ட்விட்டரில் நான் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பதை சோகத்துடன் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இந்தி யாமி கௌதம் நடிக்கிறார் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது யாமி கௌதம் இந்த படத்திலிருந்து விலக, ஹுமா குரேஷி அவருக்கு பதிலாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹுமா குரேஷி ரஜினிக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெற்று முடிந்ததாக சொல்லப்படும் நிலையில் இதுவரை படத்தில் யார் யார் அதிகாரப்பூர்வமாக நடிக்கிறார்கள் என்பதை படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT