A huge gift of love from Sonu sood fans

சோனுசூட் நடிகராக மட்டும் அல்லாது தனது அறக்கட்டளையின் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும் நற்பணிகளையும்செய்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பல்வேறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக வாகன வசதி ஏற்படுத்தித்தந்தார். உதவி என்று கேட்போருக்கு வாரி வழங்கி வருகிறார்.

Advertisment

இவ்வாறு பல்வேறு உதவிகளை செய்து வரும் சோனுசூட்டை கெளரவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் இணைந்து 2500 கிலோ அரிசி கொண்டு அவரது உருவப்படத்தை வரைந்திருக்கிறார்கள். இந்த படமும் அதை வரையும் வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

அரிசியால் வரைந்த படத்திற்காக சோனுசூட் நன்றி தெரிவித்துள்ளார். அதே சமயம் இவ்வளவு அரிசியை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்த ரசிகர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அரிசியை விநியோகம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.