/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/207_21.jpg)
யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் வார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.
இப்படம் குறித்து சமீபத்திய நேர்காணலில் பேசிய ஹிரித்திக் ரோஷன், “வார் 2 படம் விரைவில் துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டியே துவங்க உள்ளது” என்று தெரிவித்தார்.இப்படத்தின் ஜுனியர் என்.டி.ஆர். இணைவது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 ஆம்தேதி துவங்குகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இதற்காக ஹிரித்திக் ரோஷன் கடந்த சில வாரங்களாக பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஹிரித்திக் ரோஷன், "கபீர் குறிப்பிடத்தக்க தடத்தை பதித்துள்ளான். இதனால் மீண்டும் கபீராக மாறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் கபீரை இந்த முறை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்தஎனக்கு சவாலாக இருக்கும். அவனின் மற்றொரு கோணம் வித்தியாசமாக இருக்க போகிறது," என்று தெரிவித்தார். இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம்தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)