Advertisment

விஜய் சேதுபதி படத்தின் ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன்? 

hrithik roshan

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. 2017-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisment

தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது எனச் செய்திகள் வெளியாகின. தமிழில் இப்படத்தை தயாரித்த சஷிகாந்த், பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, புஷ்கர் - காயத்ரி இயக்குகின்றனர். முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில், ஷாருக் கான் நடிப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கானும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியானது. பின்னர், ஏற்கனவே தான் நடித்து, கரோனா காரணமாகத் தடைபட்ட படத்தின் பணிகளைத் தொடரவேண்டியுள்ளதால் இப்படத்தில் இருந்து அமீர் கான் விலகிவிட்டார் எனத் தகவல் வெளியாகியது. இருப்பினும், படக்குழுவிடம் இருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Advertisment

இந்த நிலையில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விக்ரம் வேதா படத்தின் ரீமேக் விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதால், படக்குழுவிடம் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

actor vijay sethupathi hrithik roshan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe