Hrithik Roshan shared his childhood memories

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஹ்ரித்திக் ரோஷன், திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளைக் கடந்துள்ளார். இதையொட்டி அவர் நடித்த 'கோய்…மில் கயா' (Koi…Mil Gaya), படம் கடந்த 4 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. இப்படத்தில் வளர்ச்சியற்ற ரோஹித் இளைஞனாக ஏலியனை சந்தித்து சக்தி பெறும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல் தன் பள்ளி காலத்தில் சக மாணவர்களால் அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பேசியுள்ளார்.

Advertisment

அவர் கூறுகையில், "ரோஹித் கதாபாத்திரத்தோடு என் கதாபாத்திரத்தை முழுவதும் தொடர்புப்படுத்திக் கொண்டேன். வளரும் காலகட்டத்தில் என் திக்கு வாயால் நிறைய அவமானங்களைச் சந்தித்தேன். அதனாலேயே ஸ்கூலுக்கு போகமாட்டேன் என அம்மாவிடம் அழுவேன். உண்மையில் படத்தில் ரோஹித்தின் ஸ்கூட்டியை ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உடைக்கும் காட்சி என் நிஜ வாழ்க்கையில் நடந்தது. நான் பொக்கிஷமாக வைத்திருந்த சைக்கிளை என்னுடைய சீனியர்கள் அடித்து உடைத்தனர். அதனால் மனம் நொந்து போனேன். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு அதற்கு முன்னரே எனது வாழ்க்கையில் அனுபவித்து விட்டேன்" எனக்கூறியுள்ளார்.

Advertisment