Advertisment

ரூ.100 கோடி மதிப்புள்ள வீடு - காதலியுடன் குடியேறும் ஹிரித்திக் ரோஷன்

Hrithik Roshan, Saba Azad to move into lavish ₹100 crore Mumbai home

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஹிரித்திக் ரோஷன் கடந்த 2000ஆம் ஆண்டு சுஷானேனை திருமணம் செய்து கொண்டார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் நடிகை மற்றும் பாடகி ஷபா ஆசாத் என்பவரை சமீப காலமாக காதலித்து வருகிறார். இருவரும் வெளியில் எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மும்பையில் மூன்று மாடிகள் கொண்ட ஆடம்பர சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேற முடிவு செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடு ரூ.100 கோடி என்று சொல்லப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேசன்ஷிப் முறையில் இருக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

hrithik roshan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe