'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார்.இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
'என்.டி.ஆர் 30' படத்தைஎன்.டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனைமுன்னிட்டு 'என்.டி.ஆர் 30'படக்குழுவும் படத்தின்தலைப்புமற்றும்ஃபர்ஸ்ட் லுக்போஸ்டரை நேற்று இரவு 7மணிக்குவெளியிட்டது. அதன்படி படத்துக்கு 'தேவரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி (05.04.2024) திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்ஜூனியர் என்.டி.ஆருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் நடிகர்ஹிரித்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள்ஜூனியர் என்.டி.ஆர்.உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகவும்சிறந்த ஆண்டாகவும் அமைய வாழ்த்துகள். உங்களுக்காக யுத்த பூமியில் காத்திருக்கிறேன் நண்பரே.நாம் சந்திக்கும் வரைஉங்கள் நாட்கள் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் சந்திக்கும் வரை எனஹிரித்திக் ரோஷன் குறிப்பிட்டது விரைவில் இருவரும் இணையவுள்ள படமாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. முன்னதாகயாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில்அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில்ஜூனியர் என்.டி.ஆர் கமிட்டாகியுள்ளதாகதகவல் வெளியானது. இப்போது கிட்டத்தட்ட அது உறுதியாகியுள்ளது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்ஹிரித்திக் ரோஷன் அந்தரகசியத்தை சூசகமாகஉடைத்துள்ளதுபோல் தெரிகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படம் மூலம்பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.