Advertisment

உணவு கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய ஹிருத்திக் ரோஷன் ரசிகர்கள்

hrithik roshan birthday celebrations

Advertisment

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான 'கஹோ நா... பியார் ஹை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

குறிப்பாக இவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ரசிகர்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார்கள். அதுமட்டுமல்லாமல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி உணவு பரிமாறி கொண்டாடினார்கள்.

hrithik roshan
இதையும் படியுங்கள்
Subscribe